மேலும் செய்திகள்
கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
16-Nov-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், கொத்துப்-பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், பச்சிக்கானப்பள்ளியிலி-ருந்து கிருஷ்ணகிரிக்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள, 75 வேலிகற்-களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கே.ஆர்.பி., அணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.
16-Nov-2025