உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய லாரி;என்.ஹெச்.,ல் போக்குவரத்து பாதிப்பு

தடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய லாரி;என்.ஹெச்.,ல் போக்குவரத்து பாதிப்பு

சூளகிரி:சூளகிரி அருகே, மேம்பாலம் வேலை நடக்கும் பகுதியில் லாரி விபத்தில் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில், 5 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோபசந்திரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதனால் சாலையின் இருபுறமும் செல்லும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகின்றன. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஆனால், பணிகளை விரைந்து முடிக்காமல், தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்தகதியில் வேலைகளை செய்கிறது.இந்நிலையில் நேற்று, ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி, கோபசந்திரத்தில் மேம்பாலம் நடக்கும் பகுதியில், சாலையில் வைக்கப்பட்டிருந்த மேம்பால பணி தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், 3 மணி நேரத்திற்கும் மேலாக அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டன. 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டி கள் கடும் அவதியடைந்தனர். விபத்தில் சிக்கிய லாரியை, போலீசார் அப்புறப்படுத்திய பின், படிப்படியாக போக்குவரத்து நெரிசல் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ