உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தரமற்ற மிளகாய் நாற்றால் நஷ்டம்; விவசாயி வேதனை

தரமற்ற மிளகாய் நாற்றால் நஷ்டம்; விவசாயி வேதனை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, 47. விவசாயி. இவர், 5 ஏக்கரில் பச்சை மிளகாய், 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். ஓசூர் அருகே தொரப்பள்ளியிலுள்ள தனியார் நர்சரியில் மிளகாய் நாற்று வாங்கி நடவு செய்தார். நேற்று முன்தினம், 4 மூட்டை மிளகாயை அறுவடை செய்து, ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டிற்கு அனுப்பினார். மிளகாய் காரமில்லாமல் தரமற்று உள்ளதால், விலை போகாது என கடைக்காரர்கள் கூறினர். அதிர்ச்சியடைந்த மூர்த்தி, நர்சரி உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை. அதன் பின் தான், தரமில்லாத நாற்றுகளை நர்சரி நிர்வாகம் தனக்கு விற்பனை செய்தது மூர்த்திக்கு தெரிந்தது.இது குறித்து அவர் கூறுகையில், ''போலி விதைகள் மூலம் நாற்று தயாரித்து விற்பனை செய்யும் நர்சரிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி