மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த இருவருக்கு 'காப்பு'
12-Jul-2026
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா,51; கூலித்தொழிலாளி. இவரது மருமகன் கிரீஷ், கடந்த, 12ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, முட்டை வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள சிக்கன் கடைக்கு சென்றார். அங்கு, அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மஞ்சுநாத்,39, மற்றும் டிரைவர் பிரேம்நாத்,36, ஆகியோருக்கும், கிரிஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதை கேள்விப்பட்ட கிருஷ்ணப்பா, இருவரிடமும் சென்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த இருவரும், கிருஷ்ணப்பாவை தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். இதில் நெற்றியில் காயமடைந்த கிருஷ்ணப்பா, மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்படி, மஞ்சுநாத், பிரேம்நாத் மீது வழக்குப்பதிந்த போலீசார், மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
12-Jul-2026