அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6.25 லட்சம் மோசடி செய்தவர் கைது
கிருஷ்ணகிரி: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, கல்லுாரி மாணவரிடம், 6.25 லட்சம் ரூபாயை மோசடி செய்தவர் கைதானார்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் சாலையை சேர்ந்தவர் லோேகஷ். 47. இவர் பொதுப்பணித்துறை மேற்பார்வையாள-ராக பணியாற்றிய போது, லஞ்சம் பெற்ற புகாரில் கடந்த, 2016 ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவர் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆட்டோ கேரேஜூக்கு வந்து சென்றபோது, தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கும் பிரித்வி, 21 என்ற மாணவருடன் பழக்கம் ஏற்-பட்டது. அவருக்கு பொதுப்பணித் துறையில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி, 6.25 லட்சம் ரூபாயை அவரிடம் வாங்கி-யவர், சில நாட்களுக்கு முன், பணி நியமன உத்தரவை வழங்-கினார்.அதை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து சென்ற-போது தான், இது போலி என தெரியவந்தது. நேற்று முன்தினம் அவர், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் அளித்த புகார் படி, லோகேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே மேலும் மூவர், இதேபோல புகாரளித்துள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.