மேலும் செய்திகள்
டிரைவர் கொலையில்மச்சான் மீது போலீசார் சந்தேகம்
23-Jan-2025
முறை தவறிய கள்ளக்காதலால் விபரீதம்டிரைவரை வெட்டி கொன்ற மச்சான் கைதுஓசூர்,: ஓசூர், தேர்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 32, டிரைவர். இவரை, கடந்த, 21 இரவில் பைக்கில் வந்த இருவர், தேர்பேட்டை அருகே, சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பினர். இது குறித்து, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில், சிவக்குமாரின் மனைவியின் அண்ணனான நவீன், 33, என்பவரின் மனைவியுடன் சிவக்குமாருக்கு கடந்த மூன்றாண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இது குறித்து தன் மனைவியையும், சிவக்குமாரையும் பலமுறை நவீன் கண்டித்துள்ளார். 'நீங்கள் முறை தவறிய உறவு வைத்துள்ளது வெளியில் தெரிந்தால் அவமானம். இனிமேலாவது ஒழுங்காக இருங்கள்' என இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர்கள், தங்கள் கள்ளக்காதலை விடவில்லை.ஆத்திரமடைந்த நவீன், தன் நண்பரும் டிரைவருமான வினோத்குமார், 26, என்பவருடன் சேர்ந்து சிவக்குமாரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி இருவரும் கடந்த, 21ல் வீட்டின் முன் நின்றிருந்த சிவக்குமாரை, ஓட ஓட விரட்டி சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில், ஓசூர் பகுதியில் தலைமறைவாக சுற்றித்திரிந்த நவீன், வினோத்குமார் ஆகிய இருவரையும் நேற்று மாலை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
23-Jan-2025