உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாடி படிக்கட்டில் தவறி விழுந்தவர் சாவு

மாடி படிக்கட்டில் தவறி விழுந்தவர் சாவு

ஓசூர்; ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குபா கெர்வாட், 31. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீர-னப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 25ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, குடிபோதையில் முதல்மாடி படிக்-கட்டில் ஏறிய போது, தவறி விழுந்து தலையின் பின்புறம் காயமடைந்தார். லேசான காயம் என நினைத்து, தன் உறவினருடன் சென்று சாப்பிட்டு விட்டு, முதல் மாடிக்கு துாங்க சென்றார்.நேற்று முன்தினம் காலை அவர் எழுந்து வரா-ததால், உறவினர் சென்று பார்த்தார். அங்கு, குபா கெர்வாட் படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்புற தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரிந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ