உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு

பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியரின் சுய பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் தற்காப்பு கலை அடிப்படை பயிற்சிகளான கராத்தே, சிலம்ப பயிற்சி நடந்தது.இதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்தில், தற்காப்பு கலை பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்சி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, இம்மாவட்டத்தில் இயங்கி வரும், 20 பள்ளி மற்றும் கல்லுாரி சமூக நல விடுதிகளில் தங்கி பயிலும், 1,601 மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கராத்தே அடிப்படை பயிற்சி ஒரு வாரத்திற்கு, 3 பயிற்சிகள் வீதம், 36 பயிற்சிகள், 3 மாதத்திற்கு அளிக்கப்பட உள்ளது. இதை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜகோபால், கல்லுாரி முதல்வர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !