உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடிப்படை வசதிக்கு மேயர் உறுதி

அடிப்படை வசதிக்கு மேயர் உறுதி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில், மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்போது, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதை கேட்டறிந்த மேயர் சத்யா, அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார். மாநகராட்சி உதவி பொறியாளர் பிரபாகர் மற்றும் தி.மு.க., நிர்வாகி ஜெயக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !