உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்னாள் சீருடை பணியாளர்கள் நலச்சங்கத்தின் மருத்துவ முகாம்

முன்னாள் சீருடை பணியாளர்கள் நலச்சங்கத்தின் மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் சீருடை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பையனப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. முன்னாள் சீருடை பணியாளர்கள் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜகோபால், மாதப்பன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி அகர்வால் கண் மருத்துவமனை விக்ரமன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கண் பரிசோதனை, பி.எஸ்.வி., மருத்துவ குழுவினரால் ரத்த கொதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் அவர்கள் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில், கலந்து கொண்டவர்களிடம் வரும் டிச.,ல், போலீசார் சார்பில், சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து நடக்கவுள்ள, விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் ராவணன், கணேசன், கோபால் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை