உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து தலைமையாசிரியர்களுடன் கூட்டம்

10, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து தலைமையாசிரியர்களுடன் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரி-யர்களுடனான, பகுப்பாய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:நடந்து முடிந்த 10, பிளஸ் 2 வகுப்புகளில், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு. அவர்கள் நடப்பாண்டிலும், அதேபோல தேர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி குறைந்த, 25 பள்ளிகள் மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி குறைந்த, 50 பள்ளிகள் குறித்து விரி-வான அறிக்கை கோரப்பட்டது. அதன்படி பள்ளிக்கு தேவையான உதவிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நடப்பாண்டில் அந்தந்த பள்ளிகள் கடைபிடித்து, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்.கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு உயர்நி-லைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை