தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நாடார்கொட்டாயைச் சேர்ந்தவர் குமாரத்தி, 55. இவர் தன் வீட்டின் முன் கிருஷ்ணகிரி - திருப்பத்துார் சாலையோரம் பூக்கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் 2:30 மணிக்கு கடையில் இருந்தபோது, அவரது மகனான லாரி டிரைவர் திருப்பதி, 35, கடையின் முன் தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, குமாரத்தியுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது திருப்பத்துாரில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வந்த, 'ரெனால்ட் க்விட்' கார், குமாரத்தி, திருப்பதி மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். பர்கூர் போலீசார் சடலங்களை மீட்டு விசாரித்தனர்.