உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் அமீர், 36, டிரைவர்; இவர் மனைவி அஸ்மா சுல்தான், 31. இவர்-களுக்கு, 9 வயதில் பெண் குழந்தை மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 3 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அஸ்மா சுல்தான், மீண்டும் திரும்பவில்லை. அவரது கணவர் புகாரில், பெங்களூருவை சேர்ந்த வாசிம் என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக குறிப்பிட்டுள்ளார். ஹட்கோ போலீசார், அஸ்மா சுல்தானை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !