தொழிலாளி கொலையில் தாய், மகனுக்கு வலை
ஓசூர்: சூளகிரி அருகே நடந்த தொழிலாளி கொலையில், தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உடுங்கல் போடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 45. இவரது தம்பி வெங்க-டேசன், 37. கர்நாடகா மாநிலத்தில் தேன் எடுக்கும் வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். சகோதரர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, சூளகிரி அடுத்த காலிங்கவரம் அருகே உள்ள பிரச்னைக்குரிய நிலத்தில் இருந்த புதர்களை, வெங்கடேசன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதையறிந்த மாதேஷ், அவரது மனைவி ரீனா, 40, இவர்களின், 18 வயது மகன் ஆகியோர் அங்கு சென்றனர். அங்கு தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மாதேஷ், தன்னிடமிருந்த கத்தியால், தம்பி வெங்கடேசனை குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.பின், குருபரப்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் மாதேஷ் சரண-டைந்தார். அவரின் மனைவி ரீனா மற்றும் மகன் ஆகியோர் தலை-மறைவான நிலையில், சூளகிரி போலீசார் அவர்களை தேடி வரு-கின்றனர். இதற்கிடையே, மாதேஷின் மனைவி ரீனாவுடன், கொலையான வெங்கடேசனுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததா-கவும், அதை பலமுறை மாதேஷ் எச்சரித்ததாகவும், போலீசா-ருக்கு தகவல் கிடைத்துள்ளது. அது உண்மையா என்ற கோணத்-திலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.