உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அன்னை தெரசா பிறந்த நாள் விழா

அன்னை தெரசா பிறந்த நாள் விழா

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி, துாய்மை பணியாளர்களுக்கு, நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். ஊத்தங்கரை டவுன் பஞ்., பணிபுரியும் அனைத்து துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு நல உதவிகளை எல்.பி.ஜி., சேல்ஸ் துணை மேலாளர் ராய்டன் கேஸ்டிலினோ, ஆர்.எல்.ஆர்., இண்டேன் காஸ் லதா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். இதில் பாஸ்கரன், சுகுணா, மாரியப்பன், சகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை