மேலும் செய்திகள்
தெரு நாய் கடித்து 3 ஆடுகள் பலி
08-Apr-2025
தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி
10-Apr-2025
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த புதுாரை சேர்ந்தவர் பாப்பம்மா, 44. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர், 15 ஆடுகளை வளர்த்துக் கொண்டு, தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மதியம் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்த நிலையில், பாப்பம்மா வரவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள், பெங்களூருவில் வசிக்கும் அவரது மகன் கங்காதரன், 27, என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று காலை சொரகுறுக்கை கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில், பாப்பம்மா சடலமாக கிடந்தார். அவரது உடைகள் கலைந்த நிலையில், மரக்கிளையில் அவரது சேலையால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். கங்காதரன், தன் தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Apr-2025
10-Apr-2025