மேலும் செய்திகள்
மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி
22-Dec-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி துவங்கியது. மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு மின்பாது-காப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசு-ரங்களை வழங்கினார். புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய விழிப்-புணர்வு பேரணி ராயக்கோட்டை சாலை, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறி-யாளர் அலுவலகத்தை அடைந்தது. கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், செயற்பொறியாளர் (பொது) வேல், பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
22-Dec-2024