உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., சார்பில் தேசிய கொடி பேரணி

பா.ஜ., சார்பில் தேசிய கொடி பேரணி

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், பா.ஜ., கட்சி சார்பில், சுதந்திர தின விழாவையொட்டி, மூவர்ண கொடி பேரணி நேற்று நடந்தது. கெலமங்கலம் மேற்கு மண்டல தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நாராயணன் மற்றும் முனிரெட்டி, ராம்பிரகாஷ், மண்டல பொதுச்செயலாளர் ஆனந்த்ரெட்டி, துணைத்தலைவர் முனிராஜ், மண்டல் துணைத்தலைவர் சென்னிப்பா உட்பட, 300 க்கும் மேற்பட்டோர், தேசிய கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.கெலமங்கலம் அரசு மருத்துவமனை முன் துவங்கிய பேரணி, தேன்கனிக்கோட்டை பிரதான சாலை வழியாக, நான்கு ரோடு சந்திப்பு வரை சென்று, அங்கிருந்து மீண்டும் கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ