தேசிய தன்னார்வ ரத்த தான தினம்
தேசிய தன்னார்வ ரத்த தான தினம்கிருஷ்ணகிரி, நவ. 22-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய தன்னார்வ ரத்தான தினத்தையொட்டி, 40 ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் சரயு, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கிபேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்தாண்டில், 107 முகாம்கள் நடத்தப்பட்டு இதன் மூலம், 9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிக தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதால் விபத்துகளும் அதிகம் ஏற்படுகிறது.இதில் பாதிக்கப்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இக்கட்டான காலத்தில் சிகிச்சை மற்றும் ரத்தம் தேவைப்படுகிறது. எனவே இங்குள்ள முகாம் அமைப்பாளர்கள் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கு ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ரத்த வங்கி மருத்துவர் வசந்தகுமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.