உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் புதிய சப் - கலெக்டர்

ஓசூரில் புதிய சப் - கலெக்டர்

ஓசூர்:ஓசூர் சப்-கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரியங்கா கடந்த ஜூன் மாத இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு, கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில், சேலம் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக இருந்த ஆக்ரிதி சேத்தி, ஓசூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் ஓசூரின், 83வது சப்-கலெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆக்ரிதி சேத்தி எம்.காம்., பட்டதாரி. கடந்த, 2023ல் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, சேலத்தில் பயிற்சி கலெக்டராக இருந்தார். அங்கிருந்து ஓசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பொறுப்பேற்று கொண்ட அவருக்கு, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ