உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10 நாளாக குடிநீர் வரவில்லை பொதுமக்கள் சாலை மறியல்

10 நாளாக குடிநீர் வரவில்லை பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர், காளியண்ணன் நகரில், 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அப்பகுதி மக்களும், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு-வெப்படை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆனங்கூர் பஞ்.,க்குட்பட்ட காளியண்ணன் நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆற்று தண்ணீர், கடந்த, 10 நாட்களாக வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் வராததால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தண்ணீர் எங்கு வருகிறதோ, அங்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். தண்ணீர் வழங்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ