நொரம்பு மண் கடத்தல்
நொரம்பு மண் கடத்தல் அரூர், நவ. 21- அரூர் அடுத்த எச்.அக்ரஹாரம் நாயக்கன் ஏரியில், நொரம்பு மண் கடத்துவதாக கலெக்டர் சாந்திக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுப்படி, அரூர் ஆர்.ஐ., சத்தியபிரியா மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று நாயக்கன் ஏரிக்கு சென்றனர். அவர்களை கண்டதும், ஏரியில் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பொக்லைன் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து, 3 பொக்லைன் வாகனங்களை ஆர்.ஐ., சத்தியபிரியா, பறிமுதல் செய்து, அரூர் போலீசில் ஒப்படைத்தார்.