மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, பாரூர், ஆனந்துார், மாவத்துார், அதேபோல் மத்துார், குள்ளம்பட்டி, களர்பதி, வாலிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நேற்று காலை, 6:00 மணி முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் அவதிக்கு ஆளாயினர். பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.