உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மினி லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளி சாவு

மினி லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளி சாவு

ஓசூர்: கர்நாடக மாநிலம் பொம்மசந்திராவிலிருந்து, டி.கொத்தப்பள்ளிக்கு முள்ளங்கி லோடு ஏற்றிய மினிலாரி நேற்று வந்தது. அதை டி.கொத்தப்பள்ளியை சேர்ந்த சதீஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதில், வடமாநிலத்தை சேர்ந்த, 11 தொழிலாளர்களும் வந்துள்ளனர். காலை, 11:30 மணியளவில் கெலமங்கலம் அடுத்த மஞ்சளகிரி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராம்பாபு, 29 என்ற வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மேலும், 8 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி