மேலும் செய்திகள்
ஓசூரில் நர்சிங் மாணவி மாயம்
10-May-2025
ஓசூர்,ஓசூரில், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து கொட்டிய வெங்காயத்தை, பொதுமக்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பெரிய வெங்காய லோடு ஏற்றிக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஈச்சர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் தர்கா அருகே தளி ஜங்ஷன் மேம்பாலம் மீது நேற்று மதியம், 3:45 மணிக்கு லாரி சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்பு மீது கவிழ்ந்து சாய்ந்த நிலையில் நின்றது. இதில், லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சரிந்து, பாலத்திற்கு கீழே இருந்த தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் விழுந்தன.அப்போது அவ்வழியாக பெரியண்ணன், 55, என்பவர் ஓட்டி சென்ற சரக்கு வாகனத்தின் மீது மூட்டைகள் விழுந்ததால், வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமானது. சர்வீஸ் சாலையில் கொட்டிய வெங்காயத்தை, அங்கு வந்த மக்கள் அள்ளி சென்றனர். விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
10-May-2025