மேலும் செய்திகள்
ராமநவமி உற்சவம் கடலுார்
07-Apr-2025
கிருஷ்ணகிரி:சூளகிரி அருகே, குண்டுகுறுக்கே கிராமத்தில் உள்ள முத்துராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், 4ம் ஆண்டு பல்லக்கு உற்சவம் நடந்தது. இதையொட்டி, கோலாட்டம், தெலுங்கு நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன், பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தங்கக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில், சூளகிரி, காமன் தொட்டி, ஆட்டகுருகை, சப்படி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
07-Apr-2025