உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பண்ணந்துார் கோவில் திருவிழா தகராறு 13 ஆண்டுகளுக்கு பின் உடன்பாடு

பண்ணந்துார் கோவில் திருவிழா தகராறு 13 ஆண்டுகளுக்கு பின் உடன்பாடு

கிருஷ்ணகிரி, பண்ணந்துாரில் கோவில் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்துாரில் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கோவில் திருவிழாக்கள் நடத்துவது, பண்ணந்துார் ஏரி பிரச்னை, எருதுவிடும் விழா நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.இதுதொடர்பாக, 13 ஆண்டுகளாக ஒவ்வொரு நிகழ்வுகளிலும் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது.கடந்த வாரம் திரவுபதியம்மன் கோவில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில், இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல், சாலைமறியல், போராட்டம் வரை சென்றது. இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரிஆர்.டி.ஓ., ஷாஜகான் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., சங்கர், பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா ஆகியோர் பண்ணந்துார் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது, இவ்விழாக்களின் போது, தனித்தனியாக நோட்டீஸ், பேனர்கள் வைக்கக்கூடாது. பண்ணந்துார் ஏரியில், மீன்கள் குத்தகை ஏலத்தில் அனைவரும் பங்கேற்பது. பொங்கல் திருவிழாவின் போது நடக்கும் எருதுவிடும் விழாவின் போது, ஜாதி, கட்சி உள்ளிட்ட எவ்வித பேனர்களும் வைக்கக்கூடாது. பண்ணந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமுதாய மக்களும் காளையை வடம் பிடித்து அழைத்து வருவது உள்ளிட்ட, 13 தீர்மானங்களுக்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்து, அலுவலர்கள் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இதனால், 13 ஆண்டுக்கால பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக, அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சமாதானமடைந்த கிராம மக்கள், ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை