உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓடும் பஸ்சில் மயங்கிய பயணி சாவு

ஓடும் பஸ்சில் மயங்கிய பயணி சாவு

ஓசூர், டிச. 12-கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, ஓசூர், சூளகிரி வழியாக திருக்கோவிலுாருக்கு, கர்நாடகா மாநில அரசு பஸ் நேற்று சென்றது. பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கர்நாடகா மாநிலம், குடிபண்டே பகுதியை சேர்ந்த ரங்கநாத், 44, என்பவர் பஸ்சை ஓட்டினார். பெங்களூருவை சேர்ந்த பிரகாஷ், 50, கண்டக்டராக இருந்தார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி பகுதியில் மதியம், 2:00 மணிக்கு பஸ் சென்றபோது, ஆண் பயணி ஒருவர் மயக்கம் ஏற்பட்டு இருக்கையில் சரிந்தார்.அவருக்கு கண்டக்டர் பிரகாஷ் மற்றும் பயணிகள் தண்ணீர் கொடுத்தனர். மயங்கிய பயணியை, சூளகிரியிலுள்ள, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவிற்கு பஸ்சுடன் டிரைவர் அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் லட்சுமி, பயணி இறந்து விட்டதாக தெரிவித்தார். சூளகிரி போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில் இறந்தவர், திருக்கோவிலுாரை சேர்ந்த வெங்கடேஷ், 38, என்பதும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ