பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி செய்துதர மக்கள் கோரிக்கை
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நி-லையில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பகல் நேரத்தில் பள்ளி வளாகத்தினுள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் புகுந்து மேய்கின்றன. மேலும், இரவு நேரங்களில் குடிமகன்களால் இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே, சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.