உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி வழியாக பாத்தக்கோட்டா கிராமத்திற்கு, 22ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை, 7:45 மணிக்கு பாத்தக்கோட்டா கிராமத்திற்கு வரும்.அங்கிருந்து, சூளகிரி, ஓசூருக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அந்த பஸ்சில் சென்று வந்தனர். இந்த பஸ், சில மாதங்களுக்கு முன், மேலும், 2 கி.மீ.,யில் உள்ள யாகனப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், வழக்கமாக பாத்தக்கோட்டாவிற்கு காலை, 7:45 மணிக்கு வந்த டவுன் பஸ், தற்போது அரை மணி நேரம் தாமதமாக, 8:15 மணிக்கு வருகிறது.உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள், நேற்று பாத்தக்கோட்டாவுக்கு வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். அவர்களிடம், உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர் பேச்சு நடத்தி, உரிய நேரத்திற்கு பஸ் வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து, போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு, அரை மணி நேரத்திற்கு பின், டவுன் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி