உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மோசமான நிலையில் தார்ச்சாலை நாற்று நடும் போராட்டம் நடத்திய மக்கள்

மோசமான நிலையில் தார்ச்சாலை நாற்று நடும் போராட்டம் நடத்திய மக்கள்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராயல் சிட்டி, சிலிகான்சிட்டி லே அவுட்டுகளில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அதிகாரிகளிடம் மக்கள் மனு கொடுத்த நிலையில், இப்பகுதி ஓசூர் மாநகராட்சியுடன் இணைய உள்ளதால், அதன் பின் தான் தார்ச்சாலை வசதி செய்யப்படும் என கூறியுள்ளனர்.இதற்கிடையே, இப்பகுதி மக்கள் அலசநத்தம் பிரதான தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை, கெலவரப்பள்ளி பஞ்., நிர்வாகம் அமைத்து தர வேண்டும். லே அவுட்டுகளுக்குள் பேரண்டப்பள்ளி பஞ்., நிர்வாகமும், அதற்கு வெளியே கெலவரப்பள்ளி பஞ்., நிர்வாகம் சாலைகள் அமைக்க வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ்கள் கூட, அவசரத்திற்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த, 70க்கும் மேற்பட்ட மக்கள், சாலையில் தண்ணீர் ஊற்றி நேற்று காலை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'சாலை அமைத்து தராவிட்டால், வரும் தேர்தலில் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, மக்கள் கோஷங்களை எழுப்பினர். ஹட்கோ போலீசார் மற்றும் ஓசூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், விஜயா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சாலையோரம் உள்ள பள்ளத்தில் மக்கள் தவறி விழாமல் இருக்க கல்வெட்டு அமைப்பதாகவும் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி