மேலும் செய்திகள்
மது விற்ற 5 பேர் கைது
19-Jun-2025
Stolen gutka
24-Jun-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை மின் பகிர்மான எல்லைக்கு உட்பட்ட நடுப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு, 1:00 மணியளவில், மரக்காணம் பகுதியிலிருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில்லுக்கு சவுக்கு கட்டை லோடு ஏற்றி வந்த லாரி வந்தது. நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி, 32, என்பவர் லாரியை ஓட்டி வந்தார். திருப்பதி அவரது சொந்த கிராமமான நடுப்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் மின் கம்பம் முழுவதுமாக உடைந்து, லாரி மீது சாய்ந்தது. மின் கம்பிகள் துண்டாகி மின்சாரம் தடைப்பட்டது. லாரி டிரைவர் திருப்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மின்தடையால் நடுப்பட்டி கிராமத்தை சார்ந்த, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் அவதி அடைந்தனர். சிங்காரப்பேட்டை மின்வாரிய அலுவலர்கள் சிங்காரப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Jun-2025
24-Jun-2025