உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸில் தீபாவளிக்கு ஜவுளி வாங்க குவிந்த மக்கள்

கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸில் தீபாவளிக்கு ஜவுளி வாங்க குவிந்த மக்கள்

கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸில்தீபாவளிக்கு ஜவுளி வாங்க குவிந்த மக்கள்கிருஷ்ணகிரி, அக். 27-தீபாவளி பண்டிகைக்காக, கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் கடையில், பொதுமக்கள் ஜவுளி வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையிலுள்ள, ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடையில், ஒவ்வொரு பண்டிகையின் போதும், ஆயிரக்கணக்கான ஜவுளி ரகங்களை விற்பனைக்கு குவித்து விடுகின்றனர். வரும், 31ல் தீபாவளியை முன்னிட்டு, கடந்த ஒரு மாதமாக ஆயிரக்கணக்கான ஜவுளி ரகங்களை கடையின், 4 தளங்களிலும் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். ஜவுளி வாங்கும் அனைவருக்கும், பரிசு மழையும் காத்திருக்கிறது. மேலும், 1,500 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குபவர்கள் அனைவருக்கும், நிச்சய பரிசும் வழங்கப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தீபாவளிக்கு, பல ஆயிரக்கணக்கான புதிய ஜவுளி ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், தரத்திலும், விலையிலும், மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என, கடை உரிமையாளர் ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு மற்றும் விஷால் ஆகியோர் தெரிவித்தனர். தற்போது குவிந்துள்ள ஜவுளிகளை வாங்க, பொதுமக்கள் அலைமோதுவதால், கடையில் எப்போதும் கூட்டம் வழிந்தோடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை