இருவர் மாயம்
ஓசூர்: ஓசூர் குமுதேப்பள்ளி விக்னேஷ் நகரை சேர்ந்தவர் மாதேஷ் மகள் சர்மிளா, 19. தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 21ல் மாய-மானார். அவரது தாய் சுகந்தி, 34, ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், மோரனப்பள்ளி பசவேஸ்வரா நகரை சேர்ந்த சந்தோஷ், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவி சர்மிளாவை தேடி வருகின்றனர்.சூளகிரி அடுத்த கும்மளம் அருகே ராமன்தொட்டியை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி லாவண்யா, 22. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 21 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் ஆனந்த் பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், வேலுாரை சேர்ந்த தமிழ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.