கழிவறை வசதி கோரி மனு
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பூம் பூம் மாட்டுக்கார பழங்குடி இன மக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: சந்தாபுரம் பஞ்., பாலாதி நகரில், 35 குடும்பத்திற்கும் மேற்பட்ட பூம் பூம் மாட்டுக்கார பழங்குடியின மக்கள் வசிக்கிறோம். எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவறை வசதி கூட இல்லாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிக்கும் சூழலில் வாழ்கிறோம். எங்கள் பகுதியில் வசிப்போருக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.