உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திருப்பதிக்கு நடைபயணம் பக்தர்களுக்கு வரவேற்பு

திருப்பதிக்கு நடைபயணம் பக்தர்களுக்கு வரவேற்பு

ஊத்தங்கரை, திருப்பதிக்கு நடைபயணம் சென்ற பக்தர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள படப்பள்ளி, பட்டக்கானுார், பெருமாள்குப்பம் ஆகிய கிராம மக்கள் ஆண்டுதோறும் திருப்பதிக்கு நடைபயணம் சென்று வருகின்றனர். நேற்று, 160க்கும் மேற்பட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, 5 முதல் 6 நாட்கள் நடைப்பயணத்தை நேற்று தொடங்கினர். பயணத்தை தொடங்குவதற்கு முன், 11 நாட்கள் விரதம் இருந்து, படப்பள்ளியில் உள்ள திம்மராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பஜனை பாடல்களை பாடி, மேல்விளக்கு ஏற்றி, தங்கள் பயணத்தை தொடங்கினர். அவர்களுக்கு கிராம மக்கள் அமோக வரவேற்பு அளித்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !