மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம்
10-Feb-2026
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகள், நிதிஉதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம், 199 மேல்நிலைப்பள்ளிகளில், 19,355 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பயில்கின்றனர். இவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. இன்று முதல் (10ம் தேதி) வரும் பிப்., 13 வரை செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 328 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில், செய்முறை தேர்வு பாடங்கள் உள்ள, 257 மாணவர்களுக்கு நேற்று பிராக்டிகல் தேர்வு துவங்கியது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் விலங்கியல், கணினி அறிவியல், தணிக்கை அறிவியல், வேலைவாய்ப்பு திறன் உள்ளிட்ட, 8 பிரிவுகளில் துவங்கிய செய்முறை தேர்வுகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு, மாவட்ட சி.இ.ஓ., அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
10-Feb-2026