உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்

போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடுவது வழக்கம். கடந்த வாரம் போகி, பொங்கல், கரிநாள் என, 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதால், சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. விற்பனை குறைவாக இருக்கும் என்பதால், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, 500க்கும் குறைவான ஆடு, மாடுகளையே விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.அவைகளை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வராததால், வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் காய்கறிகள், தானிய வகைகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட கடைகளும், குறைந்தளவே வந்திருந்தது. பொருட்கள் வாங்க, சுற்றுவட்டார கிராம மக்களும் சந்தைக்கு மிக குறைவான அளவிலேயே வந்ததால், சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வியாபாரிகள், பொருட்களை விற்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை