உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு, பாலக்கோட்டில், காவல் உட்கோட்டத்தின் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், காரிமங்கலம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், டி.எஸ்.பி., மனோகரன் தலைமை வகித்து பேசியதாவது:- விநாயகர் சதுர்த்தியில், 27 முதல், 29ம் தேதி வரை என, 3 நாட்கள் மட்டுமே சிலை வைக்க அனுமதி. சிலை வைக்க ஆர்.டி.ஓ., அனுமதி பெற வேண்டும். சிலை வைக்கும் இடம் மக்களுக்கு மற்றும் போக்குவரத்துக்கு எவ்வகையிலும் இடையூறாக இருக்கக்கூடாது. சிலை, 10 அடிக்கு மிகாமலும், மண் மற்றும் இயற்கையில் விளைந்த மாவு பொருட்களை கொண்டும் தயாரித்து இருக்க வேண்டும். போலீசார் அனுமதித்த இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும். தகர கூரை அமைக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் எவ்வித கட்சி சார்ந்த பிளக்ஸ் போர்டு, அதை சார்ந்த தலைவர் தொடர்பான பேனர்கள் இருக்கக்கூடாது. சிலை எடுத்து செல்லும்போது மினி லாரி, டிராக்டர் போன்ற, 4 சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் இதர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.இதில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், பார்த்திபன், பாலசுந்தரம், ரவுத்திரிவெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ