உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆம்னி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம் டிரைவரை கைது செய்த போலீசார்

ஆம்னி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம் டிரைவரை கைது செய்த போலீசார்

ராயக்கோட்டை, மதுரையிலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு நோக்கி எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் சென்றது. தர்மபுரி - நெரலுார் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ராயக்கோட்டை அருகே கருக்கன ஹள்ளி பகுதியில் அன்று அதிகாலை, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.பஸ் பயணியான விருதுநகர் மாவட்டம், சொக்கம்பட்டியை சேர்ந்த தாமரகனி, 31, என்பவர் புகார் படி, பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி சென்று கவிழ்த்ததாக, சிவகாசி தேவகுமார் தெருவை சேர்ந்த டிரைவர் அஜய்ராஜ், 35, என்பவரை, ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி