போச்சம்பள்ளியில் சுற்றித்திரிந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
போச்சம்பள்ளி, ஓசூர், சானசந்திரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 30. இவரின் மனைவி வசந்தி, 28. இவர்களின், 10 வயது மகன் முத்து. நேற்று முன்தினம் ஓசூர், ஹட்கோ பகுதியில் நின்றிருந்த சரக்கு லாரியில் ஏறி விளையாடியபோது, லாரி டிரைவர் சிறுவன் இருப்பதை கவனியாமல், போச்சம்பள்ளி சிப்காட்டிற்கு லாரியை ஓட்டி வந்தார். அப்போது சிறுவனை பார்த்து, அவனை கீழே இறக்கி விட்டு, விட்டு சென்றுள்ளார். சிறுவன் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சிறுவனை மீட்டு விசாரித்தார். சிறுவன் ஓசூர், சானசந்திரத்தை சேர்ந்தவர் என தெரிந்து, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேசனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, சிறுவனை போலீஸ் துணையுடன் வாடகை காரில் அனுப்பி வைத்தார். அங்கு காத்திருந்த சக்திவேல், வசந்தியிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனை மீட்டு, 12 மணி நேரத்தில் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்த போச்சம்பள்ளி போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.