தொட்டியில் ஆண் சடலம் போலீசார் விசாரணை
உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே கொம்மேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 38. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்; கடந்த, 30ம் தேதி காலை, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் இல்லை.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பஞ்.,க்கு சொந்தமான தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது, வெங்கடேஷ் உள்ளே தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது. உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.