உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காஷ்மீர் சம்பவம் எதிரொலி தர்மபுரியில் போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீர் சம்பவம் எதிரொலி தர்மபுரியில் போலீஸ் பாதுகாப்பு

தர்மபுரி:காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதின் எதிரொலியாக, தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.ஜம்மு -காஷ்மீர் பஹல்காம் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நுழைந்து, சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இதில், 27 சுற்றுலா பயணிகள் இறந்தனர். சில சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில், சவுதி சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 400க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., பச்சியப்பன் கை துப்பாக்கியுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பைக், கார், ஆட்டோ, தள்ளுவண்டிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. நேற்று, இரவிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல், ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லுார், மொரப்பூர், பொம்மிடி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட மாவட்டம் முழுவதும், போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ