மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
கிருஷ்ணகிரி, ஜன. 1-ஆங்கில புத்தாண்டு இன்று பிறப்பதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வும், கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன், 'பொதுமக்கள் இந்த ஆங்கில புத்தாண்டில் அனைத்து வளங்களும் பெற்று, நோய் இன்றி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்' என, வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.க., மாவட்ட அவை தலைவர் தட்ரள்ளி நாகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர் மன்றத் தலைவர் பரிதா நவாப், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மேற்கு மாவட்ட துணைச் செயலாளருமான முருகன் ஆகியோரும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே போல், அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., வுமான முனுசாமி, கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், கிழக்கு மாவட்ட செயலாளருமான அசோக்குமார் ஆகியோர், 'இந்த ஆங்கில புத்தாண்டில் பொதுமக்கள் நலமுடன், வளமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்வதாகவும், விவசாயம் செழித்து, தொழில் வளம் பெருக வேண்டும் என்றும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்' என, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மேலும், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், ஊராட்சிக்குழுத் தலைவர் அம்சா ராஜன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் சிவபிரகாஷ், பா.ஜ., கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜு, இந்திய தேசிய காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், காங்., கட்சி மாவட்ட பொருளாளர் உமர் ஜி, காங்., மாவட்ட துணைத் தலைவர் சேகர், கிருஷ்ணகிரி இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் ஏகம்பவாணன், செயலாளர் கோல்டன் சுரேஷ், பொருளாளர் விஸ்வநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் ஆகியோரும், ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
20-Dec-2024