உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புரட்டாசி 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பூஜை

புரட்டாசி 4வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பூஜை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோவில்க-ளிலும் பக்தர்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.புரட்டாசி மாதத்தின், 4-வது சனிக்கிழமையை ஒட்டி மாவட்-டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கண-வாய்ப்பட்டியில் உள்ள வெங்கட்டரமண சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதே போல், ஐகொந்தம் கொத்தப்-பள்ளி கிராமத்தில், மலை மீதுள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்-ரமண சுவாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், வேலம்பட்டி பெரியமலை கோவில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், புரட்டாசி கடைசி சனியையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிக-ளவில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ