உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.96 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை

ரூ.1.96 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை

ரூ.1.96 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜைஓசூர், டிச. 2-கெலமங்கலம் ஒன்றியம், ஜெக்கேரி, பொம்மதாத்தனுார், போடிச்சிப்பள்ளி, ஆனைகொள்ளு ஆகிய பஞ்.,களில் உள்ள கிராமங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்குழு மானிய திட்டம் ஆகியவை மூலம், 1.96 கோடி ரூபாய் மதிப்பில், ஜல்லி, சிமென்ட் சாலைகள், பல்நோக்கு கட்டடம், கழிவு நீர் கால்வாய், பைப்லைன் ஆகியவை அமைக்கும் பணியை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.கெலமங்கலம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, பொறியாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபா ஜெயராமன், சுரேந்திரன், பஞ்., தலைவர்கள் கிருஷ்ணப்பா, ஆஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை