உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

கி.கிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஜக்கப்பன் நகர், 18வது வார்டு, முதல் குறுக்கு தெரு பகுதியில், வரும், 2027க்கான, 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பார்வை-யிட்டார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும், 30-ம் தேதி வரை நடக்கும். இப்பணிக்காக, 2,660 கணக்-கெடுப்பாளர்கள் மற்றும் 418 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்-பட்டுள்ளனர். இவர்கள், அரசு வழங்கியுள்ள அடையாள அட்டை-யுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வர்.பொதுமக்கள், அலுவலர்களின் அடையாள அட்டையை உறு-திப்படுத்திக் கொண்டு, தேவையான விபரங்களை வழங்கி ஒத்து-ழைப்பு வழங்க வேண்டும். கணக்கெடுப்பின் போது பெறப்படும் தகவல்கள் அனைத்தும், ரகசியமாக பாதுகாக்கப்பட்டு, கணக்கெ-டுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளி விபர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட புள்ளியல் துறை துணை இயக்குனர் குப்புசாமி, நகராட்சி கமிஷனர் சேகர், தனி தாசில்தார் வெங்கடேசன், கிருஷ்ணகிரி தாசில்தார் ரா-ஜலட்சமி நக-ரமைப்பு அலுவலர் மலர்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை