உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அஞ்செட்டியில் முன் சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு

அஞ்செட்டியில் முன் சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு

அஞ்செட்டி: அஞ்செட்டி தாலுகாவில், முன் சோதனை மக்கள் தொகை கணக்-கெடுப்பு பணி வரும், 10 முதல், 30ம் தேதி வரை நடக்க இருப்ப-தாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும், 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும் என, கடந்த ஜூன், 16ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பின் ஜூலை, 16ல், தமிழக அரசி-தழில் மீண்டும் வெளியிடப்பட்டது. முதல் முறையாக, நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்-ளது. அதற்கான முன் சோதனை நடக்க உள்ளது.இதன் மூலம் எதிர்நோக்கும் செயல்பாட்டு சவால்களை கண்ட-றிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய முடியும். முன் சோதனையின் போது, மொபைல் செயலிகளை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்-கப்பட உள்ளன. டிஜிட்டல் லே அவுட் வரைபடங்களும் வரை-யப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு வலைதளம் மூலம், இந்த முழு செயல்பாடுகளும் நிர்வகிக்கப்படும்.தமிழகத்தில், மூன்று இடங்களில் முன் சோதனை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, அஞ்செட்டி தாலுகாவில் உள்ள அனைத்து கிராம பகுதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு, 2027 மக்கள் தொகை கணக்-கெடுப்பின் முதல் கட்டமான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன் சோதனை வரும், 10 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது.எனவே, அஞ்செட்டி மக்கள் அனைவரும், முன் சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அடையாள அட்டையுடன் வரும் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு, அவர்கள் கேட்கும் அனைத்து விபரங்களையும் சரியாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ