மேலும் செய்திகள்
லாரி மீது மோதி ஊழியர் பலி
06-Sep-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன், 48. பேலகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 7:40 மணிக்கு தளி - ஓசூர் சாலையில் உள்ள கப்பக்கல் அருகே, ஹோண்டா சைன் பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக, தேன்கனிக்கோட்டை அருகே சொல்லேபுரத்தை சேர்ந்த விவின், 29, என்பவர் ஓட்டி சென்ற ஹூண்டாய் வெர்னா கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மனைவி காயத்ரி, 34, புகார்படி, காரை ஓட்டி சென்ற விவினை, மத்திகிரி போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
06-Sep-2025