உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் தனியார் ஊழியர் பலி

விபத்தில் தனியார் ஊழியர் பலி

சூளகிரி, ஓசூர், மூக்கண்டப்பள்ளி ரோஸ் கார்டனை சேர்ந்தவர் மணி, 54. இவரது மனைவி அமுதா, 46. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, 8:40 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் தம்பதி இருவரும் மகேந்திரா கெஸ்டோ ஸ்கூட்டரில் சென்றனர். சப்படியிலுள்ள தனியார் கிரானைட் நிறுவனம் அருகே, அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதில் படுகாயமடைந்த மணி, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி அமுதா, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூளகிரி இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான்பாஷா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி